MARC காட்சி

Back
தக்கோலம் வாலீஸ்வரர் கோயில்
245 : _ _ |a தக்கோலம் வாலீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a மகாதேவனாய மும்மலை ஈஸ்வரன்
520 : _ _ |a தக்கோலம் ஊருக்குக் கிழக்கில் திருவாலீஸ்வரம் என்ற சிதைந்த கோயில் உள்ளது. தாங்குதளத்திலிருந்து கொடுங்கை வரை கல்லாலும், விமானம் செங்கல்லாலும் கட்டப்பட்டது. தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. விமானம் தற்போது வட்டவடிவில் உள்ளது. ஒரு தளக் கற்றளியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும். இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் தக்கோலப் போரில் இராசாதித்தனைக் கொன்ற வரலாறு பலரும் அறிந்ததாகும். இவ்வூரில் அவன் தந்தை முதலாம் இராசேந்திரன் ஒரு கோயிலைக் கட்டியிருக்கலாம். அக்கோயில் இதுவாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குலோத்துங்க சோழபுரம் என்று இவ்வூர் பிற்காலச் சோழர் கல்வெட்டில் காணப்படுகிறது.
653 : _ _ |a தக்கோலம், தக்கோலம் வாலீஸ்வரர் கோயில், வாலீஸ்வரர் கோயில், முதலாம் இராசேந்திரன் கோயில், வேலூர் மாவட்டக் கோயில்கள், வேலூர் கோயில்கள், திருவாலீஸ்வரம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 900 ஆண்டுகள் பழமையானது. பிற்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
914 : _ _ |a 13.02239598
915 : _ _ |a 79.70599506
916 : _ _ |a வாலீஸ்வரர்
918 : _ _ |a சௌந்தரநாயகி
927 : _ _ |a முதலாம் இராஜேந்திரனுடைய 8-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டே வாலீஸ்வரர் கோயிலின் தொன்மையான கல்வெட்டாகும். எனவே கி.பி. 1020-க்கு முன் இக்கோயில் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. இறைவன் மகாதேவனாய மும்மலை ஈஸ்வரன் எனவும், இவ்வூர் திருப்பாமுதல் எனவும் கல்வெட்டில் வழங்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் விக்கிரமச் சோழனின் கல்வெட்டு உள்ளது. கருவறை வடக்கில் உள்ள கல்வெட்டு மூன்றாம் இராசேந்திரன் காலத்தியது ஆகும். உமாமகேசுவரர், தேவன், விநாயகர் போன்றோருக்கு செப்புப் படிமங்கள் எடுத்து வழிபாட்டுக்கு மன்னன் கொடை வழங்கிய விவரம் கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. இவ்வூர் குலோத்துங்க சோழபுரம் என்றும் இக்கல்வெட்டில் கூறப்படுகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இக்கோயிலில் தற்போது நந்தி சிற்பமும், மூலவர் இலிங்கமும் தவிர வேறு எந்த சிற்பமும் காணப்படவில்லை.
930 : _ _ |a தக்கன் என்ற அசுரன் ஓலமிட்டுச் சிவனை வழிபட்டதால் தக்கன் ஓலம் தக்கோலம் ஆயிற்று என்கிறது தலபுராணம். தக்கனை அழித்த வீரபத்திரர் கோயில் ஊருக்கு மேற்கில் உள்ளது.
932 : _ _ |a இக்கோயில் ஒரு தளமுடையதாக தற்போது விளங்குகிறது. கருவறை விமானத்தின் கூரைப்பகுதி வரை கல்ஹாரமாகவும், அதற்கு மேல் பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோயில் முழுவதும் கற்றளியாக சோழர்காலத்தில் கட்டப்பட்டது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். தக்கோலப் போரில் இறந்த தனது மைந்தன் இராசாதித்தன் நினைவாக அவன் தந்தை இராசேந்திரன் இக்கோயிலைக் கட்டியிருக்கலாம்.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருவாலங்காடு, பழையனூர் கற்கிடை
935 : _ _ |a சென்னை - அரக்கோணம் சாலையில் சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தக்கோலம் கிராமத்தில் அரக்கோணம் வட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து அரக்கோணம் சென்று அங்கிருந்து தக்கோலம் செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a அரக்கோணம், தக்கோலம்
938 : _ _ |a அரக்கோணம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a அரக்கோணம், வேலூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000038
barcode : TVA_TEM_000038
book category : சைவம்
cover images TVA_TEM_000038/TVA_TEM_000038_வாலீஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000038/TVA_TEM_000038_வாலீஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000038/TVA_TEM_000038_வாலீஸ்வரர்-கோயில்_தாங்குதளம்-0002.jpg

TVA_TEM_000038/TVA_TEM_000038_வாலீஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0003.jpg

TVA_TEM_000038/TVA_TEM_000038_வாலீஸ்வரர்-கோயில்_நந்தி-0004.jpg

TVA_TEM_000038/TVA_TEM_000038_வாலீஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0005.jpg